"வானுலகம் மிஞ்சும் மருதுபாண்டியரின் புகழை என்றும் மறக்கவும் முடியாது ,அழிக்கவும் முடியாது, வாழ்க மருது புகழ்"

Monday 17 September 2012

மருது பாண்டியர் வரலாற்று பாடல்

மருது பாண்டியர் பற்றிய பாடலின் வரிகளை பதிவு செய்துள்ளேன்... இதை எழுதியவர் பசும்பொன் இரா . கருணாநிதி .......

சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க 
சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க 
வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,? 
மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு...? 
நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள் 
மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள் 
நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த இடமே 
வீரத்தாய் பொன்னாத்தாள் மருதை பெற்ற தெய்வமே 
பழனியப்ப தேவர் இந்த மருதுவின் தந்தை 
இவர்கள் வீரர்களாக மலர்ந்தது தான் தென்னகத்தின் விந்தை 
அண்ணன் தம்பி இருவருமே அன்பு கொண்டு வளர்ந்தார்கள் 
சிறுவயது பருவத்திலே துரு துருவென இருப்பார்கள் 
சேது நாட்டு புலவர் ஒருவர் இவர்கள் திறமையினை கண்டார் . மருதிருவர் என்று பெயர் சூட்டி மன மகிழ்ச்சி கொண்டார் 
சின்ன மருது பெரிய மருது இளமை வயதை அடைந்தார்கள் 
இருவருமே இணை பிரியா இமயமென திகழ்ந்தார்கள் 
இவர்கள் தெய்வபிறவி என்று ஊர் மக்கள் பேசிவந்தார்கள் 
தாய் தந்தை இருவருமே பெருமகிழ்ச்சி கொண்டனர் 
சேது நாட்டு போர் படைக்கு தளபதி மருதிருவர் தந்தை 
சூரக்கோட்டை போர்க்களத்தில் மருது பயிற்சி பெற்றனர் , 
வளரி வீச்சில் வென்றனர் . 
முறையான வாள் பயிற்சி கற்றனர் 
சேதுபதி மன்னர் இவர்களின் திறமையினை கண்டார் 
மன்னர் சோதனைகள் பல வைத்தார்
மருதிருவர் சாதனையை கண்டார்கள் 
சேது நாட்டின் போர்ப்படையில் சிறந்த வீரர்கள் என்றார் மன்னர் 
தாய் தந்தை சேதுபதி மன்னர் ஆசிபெற்று சிவகங்கை சீமை நோக்கி மருது இருவர் சென்றனர் 
மன்னர் முத்து வடுகநாதர் இருவரையும் கண்டார் 
வருங்கால தளபதிகளே வாருங்கள் என்றார் 
மருதுபாண்டியரின் பல போர்களை மன்னர் கண்டார் 
மன நம்பிக்கையும் கொண்டார் 
வேலுநாச்சியாரிடமும் பெருமிதமாக சொன்னார் 
வீர தமிழ் புலிகள் என்று மகிழ்ச்சிக்கொண்டர் 
சிவகங்கை போர் படைக்கு தளபதி நீங்கள் என்று சொன்னார் 
தளபதிகள் மருதிருவர் பல போரில் வென்றனர் 
பரங்கியரின் படையை பதற தான் வைத்தனர் 
பொறாமையா நவாபு போர்தொடுத்தார் வீராப்பாய்
தோல்வி கண்டு துவண்டு விட்டார் ஆற்காட்டு நவாப் 
மாற்றானின் சூழ்ச்சிகளால் மன்னர் மறைந்தார் 
வேலுநாச்சியார் , மருது பாண்டியர் வீறுக்கொண்டு எழுந்தனர்
பரங்கியரை விரட்ட பாளையக்காரர்களை சேர்த்தனர் 
பதட்டம் கண்ட நவாபு பயந்து ஓடிட்டார் 
வேலுநாச்சியார் அமைதி ஆட்சி கண்டார் . 
நாட்டு மக்கள் அனைவரும் நலமுடனே வாழ்ந்தனர் 
ராணி வேலு நாச்சியாரே மருது திறமையினை பார்த்து 
நாட்டை ஒப்புக்கொள்ளுமாறு மருது பாண்டியரிடம் சொன்னார்... 
பிறகு மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையின் மன்னர்கள் ஆனார்கள்.......
இந்த மண்ணில் பிறந்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கை 
அவர்கள் சந்திக்கும் மரணத்துடன் முடிந்துவிடுகிறது .. 
ஆனால் சரித்திரம் படைத்தவர்களின் வாழ்க்கை 
அவர்கள் மரணத்திற்கு பின்னும் வாழ்கிறது .. 
கால நடையில் காணாமல் போனவர் பலர் .. 
காலம் நடக்க நடக்க புதிது புதிதாய் தோன்றும் 
மனிதர்களின் நினைவில் கலந்து வாழ்பவர் சிலர் ... 
அந்த சிலரில் இருவர் தான் தென்னகத்து சிங்கங்கள் 
நம் சிவகங்கை சீமையின் ராஜாக்கள் 
மாமன்னர் மருது பாண்டியர் .. இவர்கள் 
சிவகங்கையை 20 வருடங்கள் ஆட்சி செய்த
காலத்தில் அறநெறி தவழ்ந்தது , வறுமை ஒழிந்தது , 
வாண்மை சிறந்தது , செம்மை வளர்ந்தது ,
நன்மை விளைந்தது , நாடு செழித்தது . 
மருது பாண்டியர்கள் புகழ் எட்டுத்திக்கெல்லாம் 
செந்தமிழ் நாடெல்லாம் பரவியது .. 
இந்த வீர தேவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டாலும், 
வீரர்கள் புதைகப்படுவதில்லை விதைக்கப்படுறாங்க ..

-நன்றி மேகநாதன் முக்குலத்து புலி

Monday 10 September 2012

கீழத்தூவல் - தேவரின ஐவர் படுகொலை (1957)


தமிழ்நாட்டு அரசியல், சமூக வரலாற்றில் 1957-ல் நடந்த முதுகுளத்தூர் கலவரம் முக்கியமானதாகும். இம்மானுவேல் சேகரனின் கொலையைத் தொடர்ந்து நடந்த அந்தக் கலவரத்தை அடக்க காங்கிரஸ் அரசு பல வழிகளில் முயன்றது.

இந்நிலையில் 1957 செப்டம்பர் 14 -ம் நாள், அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் மதுரைக்கு வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். மதுரைக்கு வந்த முதல் நாளே, ஐ.ஜீ மற்றும் மாவட்ட காவல் துறையினர் உட்பட பெரிய காவல்துறை அதிகாரிகளைக் கலந்து பேசினார்.தானாக ஏற்படாத கலகத்தை சதி ஆலோசனை செய்ய, அதன் விளைவு, ஈவிரக்கமற்ற கொலை பாதகன், ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" என்பவனையும், போலிஸ் பட்டாளத்தையும் கீழ்த்தூவல் கிராமத்துக்கு அனுப்பி வைத்தனர்.அதன் ஒரு கட்டமாக, 1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்தனர் காவல் துறையினர்.

கீழ்த்தூவலுக்குப் போன இன்ஸ்பெக்டர் "ரே" அமைதியாக இருந்த கீழ்த்தூவல் கிராமத்து மக்களை அடித்துத் துன்புறுத்தி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். வயது வந்தவர்களைத் துன்புறுத்தி, அவர்களைப் பிடித்து ஒரு பள்ளிக் கூடத்தில் அடைத்து வைத்தான். முதுகுளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் அய்யர், குறிப்பிட்ட தவசியாண்டி தேவர் , சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் யென்ற ஐந்து இளைஞர்களை மட்டும் வெளியே இழுத்து வந்தார். அவர்களை ரத்த வெறி பிடித்த இன்ஸ்பெக்டர் "ரே" தன் பரிவாரங்களோடு கிராமத்தை ஒட்டி உள்ள கண்மாய் கரைக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கே, கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஐந்து வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டினார்கள். என்ன நடக்கப்போகிறதோ...? என்று அறியாமல் கைகளும் கால்களும், கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து கட்டிளம் காளையர்கள் ஐவரும் அச்சத்தோடு திகைத்து நின்ற வேளையில் சுட்டுக் கொன்றார்கள்.துப்பாக்கியின் வெடி சத்தம் கேட்டு, பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பதறித்துடித்துக் கோவெனக் கதறி அழுதனர்.என்ன நடந்த அங்கே...? ரத்த வெறி பிடித்தஇன்ஸ்பெக்டர் "ரே" , அந்த இளைஞர்களின் நெஞ்சில் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டு, அந்த ஐந்து பேருடைய உயிரைப் பலிவாங்கினான்.சுட்டப்பட்ட இந்த வீரத்தியாகிகள் பிணமாக, ரத்த வெள்ளதிதில் விழுந்த பின்னும் வெறி பிடித்த மிருகம் இன்ஸ்பெக்டர் ரே, யின் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கிக் கொண்டு இருந்தது. கீழத்தூவல் கண்மாய் இரத்தத் தடாகமாக மாறியது.

அந்த ஐந்து இளைஞர்கள் செய்த குற்றம் என்ன...? எதற்கு இவ்வளவு கொடிய தண்டனை...? முத்துராமலிங்க தேவரைத் தலைவராக, இதய தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஓட்டு அளித்தது தான் அவர்கள் செய்த குற்றம். இந்த குற்றத்திற்காக தான், அந்த ஐந்து அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்றனர்.இறந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது மனைவிமார்களும் குழந்தைகளும் கூடப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.இறந்த ஐந்து இளைஞர்களின் உடல்களை உடனே பரமக்குடிக்குக் கொண்டு சென்று, பிரேத சோதனை நடத்திய பின் ரகசியமாய் போலிசாரே எரித்து விட்டனர். இதுதான் இன்றுவரைக்கும் அனைவரும், குறிப்பாக தேவர் குல மக்கள் மறக்க முடியாத கீழத்தூவல் படுகொலை சம்பவமாகும்.

கீழத்தூவல் படுகொலைக்கு பின்பும் காங்கிரச அரசின் கொலைவெறி
கீழத்தூவல் படுகொலையோடு நின்று விட்டதா, நிலைமை...? இல்லை. காங்கிரஸ் வெறியாட்டமும் போலிசின் காடடுமிராண்டித்தனமும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. கீரந்தை என்ற கிராமத்திற்குள் போலிஸ் வெறிப்பட்டாளம் நுழைந்தது. அக்கிராம மக்களில் சிலர் ஒரு சடங்கு வீட்டிலே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடிரெனப் போலிஸ் பட்டாளம் அந்த வீட்டினுள் நுழைந்தது. விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர்களை விட்டுவிட்டு வெளியே இழுத்துக் கொண்டு வந்தனர்.அவர்களின் குழம்பு பிசைந்த கரங்கள், அதில் ஒட்டியிருந்த பருப்பு உலராத நிலையில், அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அந்தப் பிணங்களை பக்கத்தில் இருந்த வைக்கோல் போரில் தீ வைத்து, அதில் தூக்கிப் போட்டு எரித்தனர். அந்த ஏழு பேரில் ஒருவர் கிழவக் குடும்பன் என்ற அரிஜன். அவர் மறவர்களுக்கு தரவாக இருந்ததால் அவரும் கொல்லப்பட்டார்.


காங்கிரஸ் அரசின் வெறித்தனம்
மேலும் நரிக்குடிப் பக்கம் உள்ள பனைக்குடி, சிறுவார் என்ற கிராமங்களில் இருந்தவர்களை மலஜலம் கூடக் கழிக்க விடாமல், போலிஸ் லாரியிலேயே வைத்திருந்தனர். மறுநாள் அவர்களை உளுத்திமடை என்ற கிராமத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போனதும், லாரியில் இருந்தவர்களில் நான்கு பேர்களைக் குறிப்பிட்டு, " உங்களை விடுதலை செய்து விட்டோம்; போகலாம்" என்று அவர்களிடம் போலிசார் கூறினர். அந்த அப்பாவிகள் நான்கு பேரும் போலிசார் சொன்னதை நம்பி, லாரியில் இருந்து இறங்கினர். தங்கள் ஊரை நோக்கி நடை போடத் தொடங்கினர்.போலிஸ் வெறியர்கள் பின்னால் இருந்து அவர்களது முதுகுப்புறமாக அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்றனர். இத்தோடு நின்று விட்டதா, போலிஸ் அட்டூழியம்...? மழவராயனேந்தலில் ஒருவரைச் சுட்டுக் கொன்றனர். கீழத்தூவல், கீரந்தை உளுத்தி மடை, மழவராயனேந்தல் ஆகிய ஊர்கள் மொத்தம் பதினேழு பேர்களைச் சுட்டுக் கொன்றனர். அதில் ஒருவர் அரிஜன், இருவர் அகம்படியர்.

தேவரை கைதுசெய்ய தீவிரம் காட்டிய காங்கிரஸ் :
இப்படியாக பதினேழு பேரைப் பலி வாங்கியதோடு காங்கிரஸ் அரசின் வெறித்தனம் நின்று விட்டதா...? இல்லை. ஐயாயிரம் பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 836 பொய் வழக்குகள் போனர். இத்தனைக்கும் மேலாக, முத்துராமலிங்க தேவர் மீது கொலை வழக்குப் போட்டனர். தேவரின் செல்வாக்கைக் குறைக்கக் காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தேவரின் மீது குற்றப்பட்டியல் 1952 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தேவரின் வளர்ந்து வந்த செல்வாக்கும் பர்வர்ட் பிளாக் குறித்த வெற்றிகளும் காங்கிரஸ் வட்டாரத்தில் தேவரின் மீது ஒரு பகைமை தோன்றக் காரணமாக அமைந்ன. தேவரின் செல்வாக்கு, அவரது கட்சியின் வளர்ச்சி, வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், தேவருக்கு எதிராக குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கியது. தேவரின் நடவடிக்கைகள், அவரது மேடைப் பேச்சுக்கள் கண்காணிக்கப் பட்டன.

இந்நிலையில் 1957 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் நாள் மதுரையில் தமுக்கம் திடலில், காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை, இந்த தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சியாக, அமைப்பு ரீதியாக உருவாக்க, மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டைத் திறந்து வைத்து தேவர் மூன்று மணி நேரம் பேசினார். இந்திய மக்களின் தொன்மை மிக்க பண்பாட்டுப் பாரம்பரியம், வீரம், விவேகம் போன்றவை பற்றியும், வாணிபம் செய்ய வந்த வெள்ளையன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவை வளைத்துப் போட்டதைப் பற்றியும் விரிவாக தேவர் தனது உரையில் எடுத்துரைத்தார். காங்கிரஸ் ஆட்சியின் அராஜக அலங்கோல ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தார். அவரது பேச்சு ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அமைந்தது. மறுநாளும் மாநாடு நடைபெற்றது.

தேவரை கைது செய்து மகிழ்ந்த காங்கிரஸ்:
தேவர் முதல் நாள் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிவிட்டு அன்று இரவு 10 மணி அளவில் காரில், தனது இருப்பிடமாகிய நேதாஜி ஆபிசிற்குச் சென்று கொண்டிருந்தார். வைகை ஆற்றுப் பாலத்தில் தேவரது கார் வந்த போது போலிசார் காரை நிறுத்தி தேவரை கைது செய்தனர். தேவர் சிறிதும் பதற்றப்படாமல், தான் அணிந்திருந்த ருத்ரதட்ச மாலையை, உடனிருந்த ஜனநாயக காங்கிரஸ் தலைவர் டி.ஜி. கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்து விட்டு, "மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். அஞ்ச வேண்டாம். சத்தியம் வெல்லும்" என்று கூறிவிட்டு, போலிஸ் வேனில் ஏறிக்கொண்டார். போலிஸ் வேன் பலத்த பாதுகாப்புடன் பறந்தது.

Saturday 8 September 2012

மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை !


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .


ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவு கொள்வோம்...

Friday 7 September 2012

நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல்




நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?''

''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது. தைவான் நாட்டு அரசும், ''தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை'' என்று கூறிவிட்டது. ஜப்பான் அரசும், ''சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்கு சூட்டிய புனைபெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை'' என்று தெரிவித்துவிட்டது. 'நேதாஜியினுடையது' என்று ஜப்பானிய கோயில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச் சாம்பல் மற்றும் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனை நடத்தவிடாமல் இந்திய அரசுதடுத்துக் குழப்பியது உலகுக்கே தெரியும். இறுதியாக, முகர்ஜி கமிஷனும்ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றுஅரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தவித காரணமும் கூறாமல், தானே நியமித்த முகர்ஜி கமிஷன் அறிக்கையை ஏற்க முடியாது என்று இந்திய அரசு நிராகரித்ததுதான்'' என்கிற தேவபிரதா பிஸ்வாஸ்,“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம்  மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய மூன்றும் சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன. இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.“எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை, சுமார் 800ஃபைல்கள் 'ரகசிய ஃபைல்கள்' என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம்உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ரகசியஃபைல்களாக வைத்திருந்து, பின்னர் ஆய்வாளர்களுக்காக 'பொது ஆவணமாக' அறிவிப்பார்கள்.


இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால், இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ரகசிய ஃபைல்களாக இந்திய அரசு வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என்பதை உலகம் அறிந்து கொள்ளும்” என்கிறார்.

''இதை யாரும் பார்க்க முடியாதா என்ன?''

“எனக்குக் காட்டி னார்கள். ஆனால், அதைப்பற்றிப்பேசவோ, மேற்கோள் காட் டவோ கூடாது'' என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்'' என்கிறார் பரூண்
முகர்ஜி.

''நேதாஜி உயிருடன் இருந்தார் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து
விட்டதாகத்தானே கூறி வந்தது?'' என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பிஸ்வாஸ்,

''மறைந்த பிறகு, நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேதாஜிக்கு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தபோது, அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியவில்லை. எனவே, மத்திய அரசு பின்வாங்கிக்கொண்டது. அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத ரத்னாவையே திரும்பப் பெற்று ஜகா வாங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஆகஸ்ட் 18,- 1945-ம் ஆண்டு, விமான விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை சொல்லப்பட்டது. நேதாஜியைப் பின் தொடரும் நேச நாட்டுப் படைகளிடம் இருந்து அவரைக் காப்பாற்றவே இக்கதை புனையப்பட்டிருக்கலாம். அதேசமயம், சோவியத் யூனியனுக்குள் நேதாஜி நழுவிச் சென்றிருக்கக்கூடும்' என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், 'பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த ஒரு துறவிதான் நேதாஜி' என்கிற
கிசுகிசு கிளம்பியபோது நிலைமையே தலைகீழாக மாறியது. 'கும்நாமி பாபா'
என்பதுதான் அந்தத் துறவியின் பெயர். அவர், மிகமிக மர்ம யோகியாக வாழ்ந்து வந்தார். திரைக்குப் பின்னிருந்தே மக்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்ட மாட்டார். அவர் மறைந்தபோது, நேதாஜி மறைந்துவிட்டார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் காரணமாக, 'அவருடைய உடைமைகளை சீல் வைத்து, பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு' உத்திரப்பிரதேச நீதிமன்றம் ஆணையிட்டது. பிறகு, டிசம்பர் 22, 2001-ல்தான் முகர்ஜி கமிஷனுக்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.

பகவான்ஜி ஒரு வங்காளி. ஆனால், ஆங்கிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம்,
ஜெர்மன் ஆகிய மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். தங்க வாட்சும்
அணிந்திருந்தார். 1945-ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ அகப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பகவான்ஜி, பார்ப்பதற்கு நேதாஜி போலவே

இருப்பார். நேதாஜி போலவே பேசுவார். அந்த வயதில், அவரது உயரமும் தோற்றமும் நேதாஜியை வெகுவாக ஒத்திருந்தது. பல் இடுக்கும், வயிற்றின் கீழே இருந்த தழும்பும்கூட ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்கள் அந்தத் துறவி வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவருடைய தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் இருந்தனர். நேதாஜி மரணம் குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு கடந்த 2002-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், இருவருடைய எழுத்தும் நடையும் ஒரே மாதிரி இருந்ததாக குறிப்பிட்டிருந்தது.

ஓவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ல்தான் பகவான்ஜியின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டு மானால், பவித்ரா மோகன்ராய் உள்ளிட்ட நெருங்கிய கூட்டாளிகளே கொண்டாடினார்கள். 1971-ம் ஆண்டு, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் போஸுக்கு நேதாஜி மரணம் குறித்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட கோஸ்லா கமிஷன் விடுத்த சம்மனின் ஒரிஜினல்கூட பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985-ல் துறவியார் மறைந்தபோது, கல்கத்தாவில் இருந்த டாக்டர் பவித்ரா மோகன் ராய், 'நான்
மட்டும் வாய் திறந்தால் நாடே பற்றி எரியும்' என்று சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு நேதாஜி உயிருடன் இல்லை. ஆனால், நான்தான் நேதாஜி என்று பலபேர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். எனவே, அதைப் பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. 1945, ஆகஸ்ட் 18-ல் நேதாஜி இறக்கவில்லை என்பது மட்டும் உறுதி'' என்கிறார்.

'நேதாஜி ரஷ்யா சென்றதாக சொல்கிறார்களே! அந்த மர்மமும் விலகவில்லையே?''

''இதுதான் மிக முக்கியமான விஷயம். அந்த நேரத்தில் வியட்நாம் விடுதலை
பெற்றிருந்தது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும், நேதாஜிக்கும்
நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும்.

அதுதான் உண்மையும்கூட.'' என்கிறவர்,

''நேதாஜி வரலாறு மட்டுமல்ல. இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றைக்கூட இந்திய அரசு வெளியிடவில்லை.

சுதந்திரப்போரின் உண்மை வரலாற்றை வெளியிட, இந்திய அரசு ஏன் மறுத்து
வருகிறது என்பது புரியவில்லை. நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய சுதந்திர வரலாற்றை எழுத 'இராதா வினோத்பால்' என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார். அதுவும் புத்தகமாகி வெளியே வரவில்லை. அப்படி வந்தால், பல உண்மைகள் வெளிப்படும்'' அழுத்தமாகச் சொல்கிறார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

நன்றி: சூரியகதிர் நாளிதழ்

(இங்கே இந்த செய்தியை நான் பகிர்ந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.)

வீரம் விளைந்த தமிழ்பூமி



மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்

இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன்

                                                       சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
                                        முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது மக்கள் இதயம்துடிதுடித்தது.அடுத்தது சின்னமருதுவின் மூத்தமகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை. கடைசியாக சின்ன மருதுவின் மகன் பதினைந்து வயது பாலகன். வயதை காரணம் காட்டி அவனை தூக்கிலிடவில்லை.ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர்.கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை,பெரியப்பா,சகோதரன்,பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை காண வைத்தது கொடுமை.அவனோடு சேர்த்து ஒரு மாவீர்னையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இருப்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.
                                                       இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி.72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டும் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.
                                                      அந்த வீரன் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவர். முதன்மையானவர்.மாவீரன்புலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத் தளபதிகளாகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. ராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று,
                                                      "மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் தர்மகுணவான் இபுராமு சாகிபும் தம்பி இசுமாலு ராவுத்தனும்..." என்று வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு - 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி சேக் உசேன் குறிபிடப்படுகிறார்.
                                                     தெற்கே சின்ன மருதும், ஊமைத்துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப்படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர்.
                                                    ‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப்படைப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன் தான். வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகமும், நாட்டுபற்று, நிர்வாகத்திறன் என்று சகல திறமையும் வேண்டும். அந்த செயலை செய்து தன்னை போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.
                                                   சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர் மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையர்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்கு சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.
                                                       இரும்பு குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்கு தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் என்று உறுதிபுண்டார். கடலிலே நாட்டுகள் பல கடந்தன.
                                                      சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்த தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம் , இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது.
                                                      உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிண்ணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்!’ ‘கிளிங்!’ என்று சத்தம் எழுந்தது.இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
                                                      சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், அவரால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள்.சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவு கூட தராமல் காலம் தள்ளியது கொடுமை. ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்க சொன்னார்கள்.காலில்உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
                                                          நீண்ட மௌனத்திற்குப் பிறகு சேக் உசேன்,"என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன்.செத்தாலும் சாவேனே தவிர அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்" என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.
                                                         ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை,"எனது இராணுவ நினைவுகள்" என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும்.
                                                        இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகப் போராடிய சேக் உசேன் போன்ற தன்மானம்மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்.
                                                                                                       
                                                      நன்றி : குமுதம் வார இதழில் இரா.மணிகண்டன் 

Thursday 6 September 2012

ராஜராஜ சோழன் ஆவணப்படம்



இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவராவார்.'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவரது மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.

இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டார்.  (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவரது மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம்பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

ராஜராஜ சோழன் பற்றிய ஆவணப்படத்தை கீழ காணலாம்.அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று.

பகுதி-1

http://www.youtube.com/watch?v=SnANjdReAlY

 பகுதி-2
http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU

 பகுதி-3

http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns

 பகுதி-4
http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw

 பகுதி-5
http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8


ராஜராஜ சோழன்  திரைப்படம்
http://www.youtube.com/watch?v=H6pdkm8iv1c

மருது படங்கள்